தினை மாவு பூரி எப்படி செய்வது?
ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க விடவே மாட்டீங்க
தினை மாவு - 1 கப்
உருளை கிழங்கு - 1
கொத்தமல்லி இலைகள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
உருளைக்கிழங்கை வேகா வைத்து எடுத்து தோலை உரித்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.
பின் உப்பு,இஞ்சிபூண்டு விழுது, எண்ணெய், நெய், கொத்தமல்லி இலைகள் அனைத்தையும் நன்கு கலந்து பிசையவும் இறுதியாக தினை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்கு ஊற விட்டு பின்பு சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்து கொள்ளவும்.
கடாயில் என்னை விட்டு தேய்த்த மாவை போட்டு நன்கு ஓரம் மொறுமொறுப்பு வரும் வரை வேகா வைத்து இறக்கவும்.
தினை நன்மைகள்
நாம் இக்காலங்களில் வழக்கமாக சாப்பிடும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் தவிர்த்து பல வகையான சிறு தானியங்களை உணவாக உட்கொள்வது நல்லது. சிறு தானியங்களில் பல வகைகள் இருக்கின்றன . அதில் ஒன்று தான் "தினை" பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் " தினை" மாவு பதிவு செய்ய பட்டிருக்கிறது.இதிலிருந்தே நமது முன்னோர்கள் தினை தானியத்தின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர்.
நார் சத்து ;
தினை நார் சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினந்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புக்களை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக இந்த கஞ்சியை ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள தாய்மார்கள் கொடுக்கிறார்கள்.
ஆண்மை குறைபாடு
திருமணமான ஆண்கள் சிலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தவிக்கின்றனர். தினையை மாவாக நன்கு இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, கலியாக கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் முறுக்கேறும், உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.
புரதம்
உடலின் தசைகளின் வலுவிற்கும் சருமத்தின் மேன்மைக்கும் மிகவும் அவசியமாகும்.தினை புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுப்பெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பலப்பல தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.
மன அழுத்தம்
அதிகமான கோபம் கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சிறிது காலத்தில் இவை மன அழுத்தம் பிரச்சனையாக உருவாகிறது. தினை தானியத்தில் மன அழுத்தத்தை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்னைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும்.
இதோ உங்களுக்காக
Comments
Post a Comment