லால் பகதூர் சாஸ்திரி பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்
அக்டோபர் 2ம் தேதியை நமது தேச தந்தை மஹாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் காந்தி ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். அனால் இந்த நாளானது நமது இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு மாமனிதருக்கும் பிறந்த நாளாகும். அவர்தான் இந்தியாவின் இரண்டாவது பிரதம அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். 1962 இல் சீனாவுக்கு எதிரான தோல்வியின் பின்னர் நாட்டின் உடைந்த தன்னம்பிக்கையை மீண்டும் உயிர்பித்தவர் மற்றும் 1965இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றவர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார்.
போர் வெற்றி மட்டுமின்றி இந்தியாவில் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, போன்றவற்றிற்கு வலி வகுத்தும் இவர் தான்.
லால் பகதூர் என்பது தான் இவர் பெயராகும். இவரின் புலமையின் காரணமாக 1926இல் காஷி வித்யாபீத் பல்கலை கழகம் இவருக்கு சாஸ்திரி பட்டம் அளித்தது.
சாஸ்திரி யின் தாய் அவருக்கு 3 மாதமாக இருக்கும் போது கங்கையில் குளிக்கும்போது அவரை தொலைத்துவிட்டார். F I R பதிவு செய்ததை அடுத்து, குழந்தையில்லாத ஒருவர் அவரை மீண்டும் அவருடைய தாயிடம் ஒப்படைத்தார்.
பள்ளி நாட்களில் சாஸ்திரி அவர்கள் தினமும் தலையின் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு கங்கையை நீந்தி கடந்தே பள்ளிக்கு செல்வார் . காரணம் அவரின் குடும்ப வறுமை.
உத்திர பிரதேசத்தில் காவல் துறை மந்திரியாக இவர் இருந்த போது கூட்டத்தை லத்தியை கொண்டு மக்களை அடித்து விரட்டுவதற்கு பதிலாக தண்ணீரை கொண்டு விரட்டிய முதல் அரசியல் வாதி இவர் தான். மக்களின் மேல் இவருக்கு இருந்த அக்கரைக்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்து காட்டாகும்.
ஜவஹர்லால் நேரு ஒருமுறை இவரை பாதி நாகரீகம் அற்றவர் என்று கூறினார். ஏனெனில் லால் பகதூர் சாஸ்திரி எப்போதும் வேஷ்டியும்,குற்தாவும் தான் அணிவார்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பதற்காக லால் பகதூர் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சாஸ்திரியின் மனைவி மாதம் 50 ரூபாய் ஓய்வூதியமாக பெற்று வந்தார். ஒருமுறை அவர் மனைவி அதிலிருந்து மாதம் 10 ரூபாய் சேகரித்து வைத்ததாக கூறினார். இதனால் கோபமுற்ற சாஸ்திரி தனது ஓய்வூதியத்திலிருந்து சில ஏழைகளுக்கு ரூபாய் 10 கொடுக்குமாறு ஊழியர்களிடம் கூறினார்.
சாஸ்திரி 11 ஜனவரி 1966 அன்று அப்போதைய யூ எஸ் எஸ் ஆரின் தாஷ்காண்டில் இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். அனால் அவரது மரணம் இப்போதும் மர்மானதாகவே கருதப்படுகிறது.
Comments
Post a Comment