லிப்ஸ்டிக் இல்லாமலேயே உங்க உதடு பிங்க் கலர் ஆகணுமா?
நீங்கள் கடைகளில் லிப் ஸ்டெயினை வாங்கி பயன்படுத்தும்போது அது உங்கள் உதடுகளை வறண்டு போகச் செய்யும். எனவே நீங்கள் ஈசியாக வீட்லையே லிப் ஸ்டெயினை தயாரித்து பயன் படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மென்மையாக பிங்க் நிறத்திலும் வைத்து நீண்ட நேரம் உங்கள் உதடுகளில் லிப் ஸ்டெயினை நீடிக்க்க செய்கிறது.
பீட்ரூட்
பீட்ரூட் உங்கள் உதடுகளுக்கு நிறத்தை மட்டும் வழங்காது இதில் ஆக்சிஜெனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உதடுகளை பாதுகாக்கவும், ஈர்ப்பத்தைத் தக்க வைக்கவும் உதவுகிறது. பீ- வாக்ஸ் வைட்டமின் ஏ கொண்டுள்ளதால் உங்கள் உதடுகளை வறண்டு விடாமல் பாதுகாக்கவும் ஆலிவ் ஆயில் உதடுகளை மென்மையாக வைக்க உதவும். 1/2 தேக்கரண்டி பீ-வேக்ஸ், ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் என்னை எடுத்து கிண்ணத்தில் போட்டு இரட்டை பாய்லர் முறையைப் பயன்படுத்தி பீ-வேக்ஸை உருக வைத்து அதனுடனாளிவ் ஆயில் சேர்த்து கலந்து சேகரித்து வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு தேவையான போது அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய்
பீ-வேக்ஸ், தேங்காய் எண்ணெய் மற்றும் ரெட் லிப்ஸ்டிக், லாவெண்டர் எண்ணெய் இவை அனைத்தும் சேர்ந்த கலவை உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடன் வைப்பதற்கு உதவும். தேங்காய் என்னை உங்கள் உதடுகளை வெடித்து விடாமலும் வறண்டும் விடாமல் பாதுகாக்கிறது. லாவெண்டர் எண்ணையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உதடுகளை ஈரப்பதத்துடன் வைக்கிறது. மேலும் இவை உதடுகளில் கொலாஜென் உற்பத்தியையும் மேம்படுத்துவதால் பீஸ் வாக்ஸ், ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் , சிறிதளவு ரெட் லிப்ஸ்டிக் , ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது பீ- வேக்ஸை கிண்ணத்தில் போட்டு தேங்காய் என்னை, பாதாம் எண்ணெய் மற்றும் ரெட் லிப்ஸ்டிக் ஆகியவற்றை அடுப்பில் வைத்து இரட்டை பாய்லர் முறையை பயன்படுத்தி வெப்பப்படுத்துங்கள். அனைத்தும் உருகியவுடன் எடுத்து அதில் லாவெண்டர் என்னை கலக்கி சேகரித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்துங்கள்.
ஆலிவ் ஆயில்
பீட்ரூட், ஆலிவ் எண்ணெய் மற்றும் தென் ஆகிய சேர்த்துப் பயன்படுத்தும் போது உங்கள் உதட்டிற்கு ஈரப்பத்தினை தருகிறது. ஆலிவ் எண்ணெய் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் காயங்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளதால் உங்களின் வறண்ட உதடுகளை மென்மையாக உதவும். தேன் என்பது இயற்கை உமிழ்நீராகச் செயல் படுவதால் உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடன் பளபளப்பாகவும் வைக்கிறது. ஒரு பீட்ரூட், நான்கு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் , இரண்டு தேக்கரண்டி தேன் எடுத்து பீட்ரூட்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதனை எடுத்து வடிகட்டி பிரிட்ஜில் வைத்து வேண்டும் பொது எடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Recommended for you
Comments
Post a Comment